பாதியில் வந்தாலும் பறவை போல் உயரத்தில் பறக்கும் பிக்பாஸ் குயின்! ! பிரபல ஹீரோவின் படத்தில் கமிட்டான சம்யுக்தா?

Cinema News

பிக்பாஸ் சீசன் 4வது மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் பிக்பாஸ் வீட்டை  விட்டு பாதியில் வெளியே வந்தாலும் அது அவருக்கு அதிஷ்டம் அடித்தது போன்றது தான். தற்போது பிரபல ஹீரோவின் படத்தில் கமிட் ஆகியிருகிறார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 4வது சீசனில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடியவர் சம்யுக்தா. பிக்பாஸ் வீட்டில் இவர் 56வது நாளில் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் தனது குடும்பத்துடன் சில தினங்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவும் செய்து இருந்தார்.

தற்போது ஒரு பெரிய படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுவும் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் துக்லக் படத்தில் சம்யுக்தா நடிக்க கமிட்டாகி இருகிறார். இந்த செய்தி அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அனைவரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளும் கூறி வருகிறார்கள்.

uma