பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக இவர்தான் படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Tamil News

இனி முல்லை இல்லை என்பதை அறிந்த ரசிகர்களுக்கு இனிமேல் யார் முல்லை என்ற கேள்விக்கு தற்போது பதில் சொல்லி இருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

மணைவிட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் முல்லையாக வாழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சித்ரா. இவரின் தனது நடிப்பினால் மக்களை மிகவும் கவர்ந்தார்.

அவர் நம்முடன் இல்லை என்ற சோகத்தில் தான் உள்ளனர் அவரது ரசிகர்கள். அதேசமயம் அந்த சீரியலில் சித்ராவை விட முல்லை கதாபாத்திரத்தை யாராலும் அழகாக நடிக்க முடியாது என்பது ரசிகர்களின் எண்ணம்.

ஆனால் சமூக வலைத்தளத்தில் யார் அந்த முல்லை என்ற கேள்விகள் உலா வந்த்தது. இந்நிலையில் சீரியல் குழுவினர் வேறொரு நடிகையை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அவர் வேறுயாரும் இல்லை பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவ்யா என்பவர் தான் நடிக்கிறாராம்.

தற்போது சீரியலின் பட பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. ஆதனால்  படப்பிடிப்பு தளத்தில் முல்லை வேடத்தில் இருக்கும் நடிகையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்,

uma