பட்டு சட்டையுடன் மாப்பிள்ளை ரெடி..! பெண் வேணும்..! கண்டிஷனுடன் தனது வளர்ப்பு நாய்க்கு விளம்பரம் கொடுத்து பெண் தேடும் குடும்பம்..! அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்..!

Cinema News

இப்போ எல்லாம் நல்ல படிச்ச  பசங்களுக்கு கூட பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஆனால் கேரளாவில் ஒரு குடும்பத்தின் பட்டு வேட்டி சட்டையுடன் சும்மா மாப்பிள்ளை மாதரி வளர்ப்பு நாயை ரெடி செய்து பெண் வேண்டும் என்று வரி விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.

இந்த விளம்பரத்தை பார்த்த நம்ம 90ஸ் கிட்ஸ் சும்மா இருப்பார்களா? இணையத்தில் இந்த செய்தியினை வைத்து மீம்ஸ்களை கொட்டி தீர்க்கிறார்கள். பெண் கேட்டால் மட்டும் பரவாவில்லை கண்டிஷனுடன் பெண் தேவை என்று போட்டு இருப்பது சற்று இணையவாசிகளை வெறுப்பு ஏற்றுவது போல் தான் உள்ளது.

கேரளாவில் சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் வெளிவந்த விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. அது ஏன் என்றால், கேரள தம்பதிகள் ஒருவர் தங்கள் வீட்டில் வளர்க்கும், மலையாளி ஹேண்ட்சம் பாய் என்ற பப்பி நாய்க்கு பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளனர்.

மேலும், அதோடு சில நிபந்தனைகளையும் கூறியுள்ளனர்.  அது என்னவென்றால் பெண் பப்பி கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டுமாம். அவர்களின் அழகான ஆண் பப்பிக்கு பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோவும் பதிவிட்டுள்ளனர்.

இந்த விளம்பரம் வைரலாகியத்தோடு, பலரும் அந்த புகைப்படத்தை ஷேரும் செய்து மணப்பெண் தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

 

uma