நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டரின் தற்போது நிலை என்ன தெரியுமா !! வனிதா கதறல்!!

Cinema News

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

வனிதா – பீட்டர் பால் மறுமணம் குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். பீட்டர்பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் போரூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு பீட்டர்பாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சூழலில் பீட்டர் மனதயிரித்தால் ஆண்டவனின் அருளால் வீடு திரும்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா.