நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரின் தற்போதைய நிலை தெரியுமா.? இந்த வயதிலும் எப்படி இருக்காங்க பாருங்க.!

Cinema News

90 க்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் ராணி, இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜ் நடித்து வெளியான வில்லுபாட்டுகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி, இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார்.அதன் பின்பு கங்கை அமரன் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார், பின்பு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த ராணி பின்னர் படக்குழுவினர் வற்புறுத்தலால் நடிப்பதற்கு ஓகே கூறினார், இந்த கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்,

இதை பலமுறை அவரே பேட்டியில் கூறியுள்ளார்,இன்றளவும் இவரை நியாபகம் வைத்திருக்க ஒரே காரணம் இந்த படத்தில் நடித்த இந்த கேரக்டர் தான். இவர் ‘நாட்டாமை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’,  ‘நம்ம அண்ணாச்சி’,, ‘ஜெமினி’, ‘காதல் சடுகுடு’ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் கடைசியாக தமிழில் 2012 ம் ஆண்டு வெளியான ஊலலலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிறகு, ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கி ளாமர் ரோலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தான் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு…’ பாடல் ஆகியவற்றில் நடித்தார். பின்பு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது ராணிக்கு அவரின் கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர்.இவர்களுக்கு காதல் திருமணம், தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது படங்களை தயாரித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், இனிமேல் கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் நாட்டாமை டீச்சரின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.