நம்ம குட்டி தல எவ்வளவு பெரிய பையான வளர்ந்துட்டாரே..! இணையத்தில் வைரலாகும் குட்டி தலயின் புகைப்படம்..! ட்ரெண்டாகும் அவரது ரசிகர்கள்!

Cinema News

தமிழ் சினிமாவில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில், தலயின் இரண்டாம் குழந்தை ஆனா குட்டி தலயின் புகைப்படம் ஒன்று தற்போது அவரது ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், நம்ம குட்டி தல எவ்வளவு பெரிய பையான வளர்ந்துட்டாரே என்று கமெண்டுகளும் பதிவு செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் அவர்கள். இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த படம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் அஜித் பற்றிய சின்ன சின்ன தகவல்கள் அனைத்தையும் வைரலாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

அந்த வகையில் தற்போது தல அஜித்தின் மகன் அத்விக் குமாரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் பெரிய பையனாக வளந்து விட்டார்.

இதோ அந்த புகைப்படம்!

uma