நடிகை ராதிகா பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம்! என்ன ஒரு அழகு சுத்தி போடுங்க!!

Cinema News

நடிகை ராதிகா சரத்குமார் அவரின் பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ராதிகா சரத்குமாரின் செல்ல மகள் ரயன் மிதுனுக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்கிற மகளும் இருக்கிறார்கள். ராதிகாவின் பெயரை லைட்டா மாற்றி ராத்யா என்று தன் மகளுக்கு பெயர் வைத்ததாக ரயன் மிதுன் தெரிவித்தார்.

இந்நிலையில் ராதிகா தன் வீட்டு செல்லக்குட்டிகளான தாரக் மற்றும் ராத்யாவுடன் விளையாடியபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் தன் பேரன், பேத்தியின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டார். இந்நிலையில் ராதிகா போஸ்ட் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள், ரசிகைகளை கவர்ந்துள்ளது.

பேரன், பேத்தியுடன் இப்படி கொஞ்சி விளையாடும் பாக்கியம் தான் பெரும் பாக்கியம். அது ராதிமாவுக்கு கிடைத்துள்ளது. அவரை இப்படி சந்தோஷமாக பார்க்க எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.