நடிகை நயன்தாரா தன்னைவிட 14 வயது குறைவான நடிகருடன் ரொமன்ஸ்? வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Cinema News

நடிகை நயன் தாரா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் மூத்த நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார் நயன்.

தற்போது மூக்கித்தி அம்மன், அண்ணாத்தே, காதலன் விக்னேஷ் சிவனின் கதுவுக்குள்ள ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார். தற்போது லாக்டவுன் என்பதால் சினிமாத்துறைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காதல் 2 கல்யாணம், ஜில் ஜங்க் ஜக், தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் போன்ற படங்களை இயக்கிய மில்லண்ட் ராவ் இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் நயன் தாரா.

தற்போது இப்படத்தின் பெயர் நெற்றிக்கண் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் நெற்றிக்கண் படம் பெரும் வெற்றியை பெற்றதால் அப்படத்தின் டைட்டிலை தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடம் அதிகாரபூர்வமாக தலைப்பிற்கு உரிமம் வாங்கியுள்ளார் மிலண்ட்.

கண் தெரியாத பெண்ணாக நடிகை நயன் தாரா இப்படத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக வடசென்னை படத்தில் தனுஷின் மச்சானாக நடித்த சரண் சக்தியை கமிட்டாக்கியுள்ளார்கள்.

 

22 வயது நடிகர் சரண் சக்தியை நயன்தாராவிற்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் இப்படத்தில் ஃபிளாஸ்பேக் காட்சிகளில் நயன் தாராவின் சிறு வயது காதலனாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வளம் வருகிறது.