நடிகை குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இந்த குழந்தையும் பிரபலம் தான்..!

Cinema News

நடிகை குஷ்பு கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் படம் வைரலாகிவருகிறது. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அரசியலிலும் அலாதி ஆர்வம் கொண்ட குஷ்பு அரசியலுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் திமுகவில் தன்னை இணைத்து பணிசெய்தவர், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தார். தொடர்ந்து காங்கிரஸில் இருந்தும் வெளியேறி பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளார் நடிகை குஷ்பு.

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர். அண்மையில் குஷ்பு தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட, நெட்டிசன் ஒருவர் அவரது மகளின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தார். இதனால் ட்விட்டரில் இருந்தே வெளியேறினார் குஷ்பு.

தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். இணையத்தில் இப்போது குஷ்பு ஒரு கைக்குழந்தையை தூக்கிவைத்திருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

அது யார் தெரியுமா? ’கிழக்கு கரை’ திரைப்படத்தில் தான் குஷ்பு அந்த குழந்தையை தூக்கிவைத்திருக்கிறார். இது வேறு யாரும் இல்லை. கில்லி திரைப்படத்தில் இளைய தளபதி விஜயின் தங்கையாக வரும் ஜெனிபர் தான் அந்த குழந்தை. 1991ல் எடுக்கப்பட்ட காட்சி தான் இது. முப்பது வருடங்களாக சினிமாவில் தன் இடத்தை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறார் ஜெனிபர்

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3: