திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்; விதியும் வினோதம் தான் எங்களை ஒன்று சேர்த்தது என்று ராதிகா போட்ட நெகிழ்ச்சி பதிவு இதோ..!

Uncategorized

80களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை ராதிகா தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களுடன் ஜோடியாகவும் மிகவும் தைரியமான கதாப்பத்திரத்திலும் நடித்தவர் நடிகை ராதிகா அவர்கள்.

அதுமட்டுமின்றி திருமணம் ஆனா பிறகும் சினிமா துறையில் தனது நடிப்பினை விடவில்லை. தொடந்து தனது நடிப்பு திறமையினை வெளியிப்படுத்தி கொண்டு இருந்த நடிகையாக இருந்தார் நடிகை ராதிகா அவர்கள். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று நடிகர் சரத்குமாரை  திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகும் சூழ்நிலையில், இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார்.  சினிமா துறையில் கலக்கிய ராதிகா சின்னத்திரை சீரியலிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா திருமணம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் நெகழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுவது  ”எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியும் வினோதம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர்” என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இருவருக்கும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த பதிவு..!

uma