திணறிய டிவிட்டர்!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்யின் மகள் சாஷா!

Cinema News

நடிகர் விஜய்யின் மகள் ட்விட்டரில் இருக்கிறாரா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அமர்களம் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள ஷாந்தனு இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதை தொடர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனிடையே நடிகர் விஜய்யின் மகள் பெயரில் இருந்து ஷாந்தனுவுக்கு வாழ்த்து வர, அவரும் நன்றி என ரிப்ளை கொடுத்தார்.

ஷாந்தனுவின் ரிப்ளையை அடுத்து, இதுதான் விஜய்யின் மகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என ரசிகர்கள் சிலர் கமன்ட்ஸ் கொடுத்து டிவிட்டரையே திணற வைத்துள்ளனர்.

இதன் பிறகு விசாரித்து பார்த்ததில், இது திவ்யா சாஷாவின் பெயரில் நடத்தப்படும் போலி கணக்கு என தெரிகிறது.

இதேவேளை, இந்த ட்விட்டர் கணக்கில் விஜய், மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய பதிவுகளும், ரசிகர்கள் பார்த்திராத புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.