தலை நிறைய முடி… அழகிய மகன் மற்றும் மனைவியுடன் சுரேஷ் சக்கரவர்த்தி..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

big boss

சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்.

பிறகு ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் செயின் நடத்தி வருகிறார். கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்து இருப்பார்.

சன் டிவியில் பிரபலமான, 90ஸ் கிட்ஸ் ஃபேவரெட் ஷோ பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார்.

எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இப்படி பன்முகம் கொண்ட கலைஞர் தான் சுரேஷ் சக்ரவர்த்தி.

இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். அவரை பற்றிய தகவலை தேடி கண்டுப்பிடித்து அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது அவரின் குடும்ப புகைப்படத்தினை கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ப சுரேஷ் சக்ரவர்த்தியா என்று வாயடைத்து போயுள்ளனர்.