தமிழகம் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மேள தாளம் முழங்க குதிரை வண்டியில் வரவேற்ற பொதுமக்கள்..! கொண்டாடத்தில் ரசிகர்கள்..!

Tamil News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மேள தாளம் முழங்க குதிரை வண்டியில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொண்டாடத்தில் ரசிகர்கள் மக்கள் வெல்லம் போல் திரண்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு செண்டை மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரை வெற்று தயாகம் திரும்பிய பின்னர் பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வந்த நடராஜனை வரவேற்று ஊர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. காரில் இருந்து இறங்கிய நடராஜனை, சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து பொதுமக்கள் ஊர்வலமாக வீடு வரை அழைத்துச் சென்றனர்.

நடராஜன் வருகையை ஒட்டி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆட்டம்,பாட்டத்துடன் கொண்டாடியதால், சின்னப்பம்பட்டி முழுவதும் விழா விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதனிடையே, வெளிநாட்டில் இருந்து வந்ததின் அடிப்படையில் நடராஜனை 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

uma