தன் வாயால் சூனியம் வைத்து கொண்ட மைக் மோகன்! அவர் மார்க்கெட்டை எப்படி இழந்தது எப்படி தெரியுமா?

Cinema News

மெளனராகம்  தொடங்கி அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். அப்படி பட்ட மோகன் தனது மார்க்கெட்டை  எப்படி இழந்தார் என்பதை தான் நாம் பார்க்க போகிறோம்.

மோகன் என்பதை விட மைக் மோகன் என்று கூறினால் திரையுலகம் எளிதில் ஞாபகம் கொள்ளும். 80 களில்  பொற்காலம் என்றால் அது மோகன் படங்கள் என்று கூறலாம். ஏன் என்றால் மோகன், இளையராஜா, கவுண்டமணி செந்தில், கூட்டணி படங்கள் பட்டையை கிளப்பியது.

இப்படி புகழ் பெற்ற மோகன் சில வதந்திகளால் வீட்டில் முடங்கிப் போனார். அது என்னவென்றால் மோகனின் திரைத்துறை வாய்ஸ் அவருடையது அல்ல அவருக்கு வாய்ஸ் கொடுத்தவர் சுரேந்திரன் என்பவர். இவர்  ஒரு பேட்டியில் சுரேந்திரன், ‘எனது வாய்சால் தான் மோகன் படங்கள் ஹிட் ஆகின்றன’ என்று கூறி இருந்தாராம். இதனால்  கோபம் அடைந்த மோகனுக்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

இதனால் தனது படங்களுக்கு இவரே வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு தன்னுடைய ஒரிஜினல் வாய்ஸில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆனால் மக்கள் மோகனை ஏற்கவில்லை. அதனால் அவருடைய மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியினை சந்தித்தது. இந்த காரணத்தினால் தான் அவர் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.

 

 

uma