நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவதுஎப்படி, எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.
View this post on Instagram