தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்த கமிஷனர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! கமிஷனரே இருந்தாலும் கவனம் தேவை இல்லையா என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..!

Tamil News

கொரோனா என்ற ஒரு வார்த்தை தான் கடந்த 2020 ஆம் ஆண்டையே ஆட்டி படைத்து. இந்நிலையில் கொரோனாவால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு  எளிதாக பரவ வாய்ப்புள்ளதால், கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி சானிடைசர் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சானிடைசர் தண்ணீர் போன்றே இருப்பதால் சிலருக்கு அடையாளம் தெரியாமல் போயிவிடுகிறது. சில சமயத்தில்  தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடிக்கக்கூடிய கவனக்குறைபாடு சம்பவம் நடைபெற்று விடுகிறது.

இந்நிலையில், மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார், மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்

அந்த வகையில், மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார், மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் இதுகுறித்து, பேசுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமென நினைத்து  சானிடைசரை குடித்துள்ளார் கமிஷ்னர். காரணம் அங்கு ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டில்களும், சானிடைசரும் இருந்ததால் இதுபோன்று நடந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதில் என்ன நற்செய்தி என்றால் அதைக் குடித்தவுடன் அவருக்கு அது சானிடைசர் என்று தெரிந்துவிட்டது. அதனால் ஒரேயடியாக விழுங்கவில்லை எனக் கூறியுள்ளார். அதிகாரியின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

இதோ அந்த வீடியோ..!

uma