ஜெய் நித்தியானந்தா!! விநாயகர் சதுர்த்தி தினமான இன்று கைலாசா நாட்டின் கைலாஷியன் டாலர்களை வெளியிட்டுள்ளார் நித்தி !!

Tamil News

பல்வேறு புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அவ்வப்போது யுடியூப் மூலம் பேசிவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கைலாசா என்ற தீவை விலைக்கு வாங்கி தனி நாடை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று ஐந்து வகையான தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என்று நித்தியானந்தா கூறியிருந்தார். அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ணா முத்ரா, புஷ்ப முத்ரா என்றும் பெயர் வைத்தார். இந்து மதத்தை பின்பற்றும் நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று அறிவித்தபடி கைலாசா நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.