சேற்றில் உருண்டு பிரண்டு முத்தம் கொடுத்து போட்டோஷூட் நடத்திய புதுமண தம்பதி !! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

Life Style

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சொல்வார்கள்.திருமணம் அவர் அவர் வசதிக்கு ஏற்ப இப்போது செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் திருமணத்தை கோவிலில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சியை பெரிதாக செய்கிறார்கள், ஒரு சிலர் கோவிலோடு திருமணத்தை முடித்து கொள்கிறார்கள், மற்றொரு சிலர் திருமணத்தை ஆடம்பரமாய் செய்ய ஆசைப்படுகிறார்கள்.

திருமணம் எப்படி செய்ய வேண்டும் எந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்பது அவர் அவர் சூழ்நிலை, மற்றும் பொருளாதார நிலையை பொறுத்தது.அந்தவகையில் திருமண விசேஷங்களில் பலவிதமான மாறுதல்கள் நடந்துவருகின்றன.

தற்பொழுது திருமணத்தில் போட்டோஷூட் நடத்துவது வழக்கம் தான். PRE -WEDDING போட்டோஷூட் அதாவது திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளையும் பெண்ணையும் விதம் விதமாக புகைப்படம் எடுத்து ஆல்பமாக தருவார்கள். அது போல் POST WEDDING போட்டோஷூட் என்பது திருமணம் முடிந்த உடன் மாப்பிள்ளையும் பெண்ணையும் வெளியில் அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்தபடி புகைப்படங்களை எடுத்து தருவார்கள்.

இது போல POST WEDDING போட்டோஷூட் ஏதோ ஒரு இடத்தில நடந்துள்ளது. அதில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் சேற்றில் விழா வைத்து உடல் முழுதும் சேற்றை பூசி விவசாய நிலத்தில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு திருமண போட்டோஷூட்டை பார்த்தது இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.