சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா நடிப்பது !! மீனாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் மீனா. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். ரஜினிக்கு எப்படி ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ரசிகர்கள் மீனாவுக்கும் இருக்கிறார்கள்.இவர் நடித்த படங்களில் சேரனின் ‘பொற்காலம்‘, ‘பாரதி கண்ணம்மா’ மிக முக்கியமான படங்கள்.

இவருக்கு நைனிகா என்ற அழகான குழந்தை உள்ளது அனைவரும் அறிந்ததே.நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அம்மாவின் வழியில் தமிழ் சினிமாவில் தன் காலடி பதித்தார் குழந்தை நைநிகா. அம்மாவுக்கு கொடுத்த ஆதரவை தமிழ் ரசிகர்கள் அவருக்கும் கொடுத்து பாராட்டினார்கள்.

தற்போது நடிகை மீனா கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.இந்த சீரிஸின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.தமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழி வெப் சீரிஸிற்கும் சென்சார் கிடையாது.இதனால் அணைத்து மொழி வெப் சீரிஸ்களும் கொஞ்சம் ஆபிசமாகவே இருக்கும்.அந்தவகையில் இந்த கரோலின் காமாட்சி ட்ரைலரில் பல விதமான ஆபாச வார்த்தைகளை மீனா பேசியுள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.