சூர்யாவின் சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிய நடிகை! நெகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு!

Cinema News

சூர்யாவின் நடிப்பில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பல பிரபலங்களும் படத்தை பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சமந்தா அவர்கள் படம் பார்த்துவிட்டு கண்கலங்கியுள்ளார். அந்த பதிவு உங்களுக்காக!

சுதா கே பிரசாத் இயக்க சூர்யா, அபர்ணா முரளி நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த படம் தான் சூரைப்போற்று. இந்த படம் இணையத்தில் வெளியாகி பலருக்கும் பிடித்த படமாகிவிட்டது. இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கேயும் சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் இயக்கத்தையும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.


பல பிரபலங்கள் படத்தை புகழ்ந்து கொட்டிய நிலையில், தற்போது நடிகை சமந்தா சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டது சூர்யாவையும், இயக்குனரையும் வாழ்த்தியதுடன் அன்பையும் கொடுத்துள்ளார். மேலும், கண் கலங்கி தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

 

 

 

 

uma