சும்மா கிடைக்கவில்லை வாய்ப்பு! மனம் திறக்கும் சூரரைபோற்று நடிகை அபர்ணா பாலமுரளி

Cinema News

சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படத்தின் நடிகை அபர்ணா பாலமுரளி அவர்கள் ’சூரரைபோற்று’  படத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபங்களை பற்றி மனம் திறக்கும் கதைகள் உங்களுக்காக.

கொரோனாவில் கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடிய நிலையில், தற்போது திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சூரரைபோற்று திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் அந்த படத்தில் நடித்த மொம்மி கதாபாத்திரத்தில்  நடித்த அபர்ணா பாலமுரளி மீது மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மொம்மி போன்று பொண்டாட்டி வேண்டும் என்று மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள்.

இதனால் மிகவும் பிரமலமைந்த அபர்ணா பாலமுரளி யூடியூப் சேனல்களில் அதிக அளவில் பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அபர்ணா பாலமுரளி சூரரைபோற்று’  படத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபங்களை பகிர்ந்துள்ளார்.

’சூரரைபோற்று’   படத்தில் நான் பல தடைகளை தாண்டி தான் இடம் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்காக ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் மேற்கொண்டேன். இதன் காரணமாக தான் சுதா அபர்ணா பாலமுரளியை பொம்மியாக என்னை செலக்ட் செய்துள்ளார் என்று மனம் திறந்துள்ளார் அபர்ணா. மேலும், அபர்ணா பாலமுரளி8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

uma