சிரஞ்சீவி சார்ஜா மற்றும் நடிகை மேக்னா ராஜ்க்கு பிறந்த குழந்தை பெயர் என்ன தெரியுமா??? – அட இந்த செல்ல பெயரா? நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Tamil News

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உ டல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா ம றை ந்த சமயத்தில் மேக்னா ராஜ் க ர் ப் பமாக இருந்தார்.

ம றை ந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு அவர் நினைத்தது போலவே கடந்த 22 ஆம் தேதி, மேக்னாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறினர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கும் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.நடிகை மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நஸ்ரியா, தனது கணவர் பகத் பாசிலுடன் நேரில் சென்று அவரையும் அவர் குழந்தையையும் சில நாட்களுக்கு முன் வாழ்த்தினார். இந்நிலையில், குழந்தையின் பெயர் சூட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், அந்த குழந்தையை ‘சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருகிறார்களாம். கவலைகளை மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளதாக மேக்னாராஜின் தந்தை தெரிவித்துள்ளார்.

விரைவில் மேக்னா ராஜ் குழந்தையின் பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும், அதனை பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.