சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்த நம்பூதிரி திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!! பேரதிர்ச்சியில் உறைந்த சினிமா துறையினர்!!

Cinema News

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சினிமா உலகமே பேரதிர்ச்சியில் உறைந்தது.  இதனையடுத்தி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சோகத்தில் முழுகினர்.

சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நிலையில், இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இவர் சந்திரமுகி, பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனாவை வென்றவர் என்று பலராலும் பாராட்டப்பெற்ற உன்னிகிருஷ்ணன் திடீரென உயிரிழந்த செய்தி சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ரஜினி, கமல் உட்பட்ட முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

uma