சத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்… வெளியான புகைப்படம்!! அட மனைவி இவர்தானா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema News

பிரபல ரிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பின்னணி பாடகர் சாய் சரனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

மனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை இமான் மூலமாக பெற்ற இவர், பின்பு சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் இவர் தனது நிச்சயதார்த்தத்தை மிகவும் சிம்பிளாக வைத்திருந்தார். இதில் இவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தான் நிச்சயம் செய்த நந்தினி விஸ்வநாதனை இன்று கரம்பிடித்துள்ளார். இவரது திருமணத்திற்கு பிரபல ரிவி பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.