க்ளாமர் குயின் சில்க் ஸ்மிதாவாக நடிக்க 10 பொருத்தமும் பக்காவா இருக்கும் நடிகைகள் இவங்கதான்..! பதறி ஓடிய தெலுங்கு நடிகை..!

Cinema News

தென்னிந்தியாவில் க்ளாமர் குயினாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் நடிக்க போவது என்ற கேள்விக்கு இணையவாசிகள் இவங்க இரண்டு பேரும் தான் இதற்கு சரிப்பட்டு வருவார்கள் என்று இரண்டு நடிகைகளை கூறியுள்ளார்கள். அவங்க யார் என்று பார்க்கலாம்!

80 களில் மிகவும் கொடிக்கட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதா. இவரின் கவர்ச்சிக்கு எல்லை இல்லமால் இருந்தது. இவர் நடிக்காத படம் சினிமாவில் தோல்வி தான் என்ற அளவிற்கு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டளமே இருந்தது. மேலும் இவரை க்ளாமர் குயின் என்று தான் அழைக்கப்படுகிறார். இவர் க்ளாமர் மட்டுமின்றி நல்ல நடிகையும் கூட அதற்கு சான்றாக பல படங்களில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இப்படி புகழ் பெற்ற நடிகையின் வாழ்க்கையை ஒரு வரலாற்று திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வருகிறது வர்ரணம் சினிமாத்துறை. இந்த படத்தை இயக்கவிருக்கிற பிரபல தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில், இந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகை அனுசுயாவை தேர்வு செய்தனர் படக்குழுவினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தார் அனுசுயா. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார்.

அந்த பதிவில் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில், இணையத்தில் இணையவாசிகளுக்குடையே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில்  யார் நடித்தா நன்றாக இருக்கும் என்ற கேள்வி பெரிதாக இருந்து வருகிறது. அதில் அவர்கள் இவங்கள போட்ட 10 பொருத்தமும் பக்காவா இருக்கும் என ரசிகர்கள் மாளவிகா மோகன் மற்றும் ரம்யா பாண்டியன் என கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.  ஆனால் படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.

uma