குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் கனி வேற யாரும் இல்லை! இந்த நடிகையின் அக்கா தான்! அழகிய புகைப்படம் உள்ளே!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் ரியாலிட்டி ஷோவானா குக் வித் கோமாளி சீசன்2 யில் பங்கேற்ற கனி வேற யாரும் இல்லை இங்க ஒரு பிரபலத்தின் அக்கா தான் அவங்க அப்படி யாரு அவங்கனு பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பு ஆகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி சீசன்2. இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி சீசன்2 தாங்க. தமிழ் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்று கூட கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள், சீரியல் நடிகைகள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் என மக்களிடையே பிரபலமானவர்கள் பங்கேற்று வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.

இந்த சீசனில் கோமாளிகளாக புகழ்,பாலா,சரத்,சக்தி,பார்வதி,சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி என்ற பல கோமாளிகள் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கனியின் உண்மையான பெயர் கார்த்திகா.

மேலும், இவர்  இயக்குனரான அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளருமான விஜயலட்சுமியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இவங்களை பற்றிய உண்மை யாருக்கும் இதுவரை தெரியாது.  தற்போது இணையத்தின் மூலம் புகைப்படங்கள் வெளியாகி ஆச்சரித்தை ஏற்படுத்தி வருகிறது.

uma