குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த ஷகிலாவின் மறு பக்கம் பற்றி மனம் திறக்கும் ஷகிலா!! மரணப்படுக்கையில் நடந்த அந்த சம்பவம்..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரிமே சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஆவர். அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்களும் உண்டு.

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பு ஆகும் சீசனில் ரீஎன்ட்ரி கொடுத்த ஷகிலாவின் மறு பக்கம் பற்றி மனம் திறந்து கூறுகிறார் ஷகிலா அவர்கள். தனது தாய் தந்தை பற்றிய சில தகவல்களையும் தெரிவித்து வருகிறார். அதனை பற்றி தான் நாம் தற்போது பார்க்கபோகிறோம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலா பற்றி அபிப்பிராயம் முற்றிலுமாக மாறிவிட்டது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் இணைய வாசிகள் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷகிலா அளித்திருக்கும் பேட்டியில் தனது இளமைப் பருவத்தை பற்றியும், தனது தந்தை தாய் பற்றிய பல தெரியாத விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், அவர் கூறும் பொழுது தனது தாயின் மரணப்படுக்கையில் தான் அவரிடம் சமையல் கற்றுக் கொண்டதாகவும், தந்தையின் அறிவுரையை கேட்டு பொய் சொல்வதில்லை முற்றிலுமாக தவிர்த்த தருணம் பற்றி எல்லாம் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது வாழ்க்கையில் பெரிதாக கஷ்டபட வில்லை என்றும், கடவுளின் அருள்தான் எல்லாமே என்றும், தனது மனதில் நினைத்ததை அவர் தந்து விடுவதால் அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்பது போன்ற நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

uma