காவலருக்கு சல்யூட் செய்த தல அஜித்! ஏன் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்..! நெகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

Cinema News

தல அஜித் குமார் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த நிகழ்வை கண்ட அஜித் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் நபர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா காரணத்தினால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

அஜித் பற்றிய தகவல்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருகிறார் தல அஜித். அப்போது அங்கிருக்கும் காவலாளர்கள் அவருக்கு சல்யூட் வைக்கின்றனர்.

அதற்கு அஜித் அவர்கள் உடனே அவர்களிடம் அன்பாக கைகுலுக்கி விட்டு அவர்களை பார்த்து “நல்லா இருக்கீங்களா” என்று நலம் விசாரிக்கிறார். இதனை பார்த்த காவலர்கள் ஆர்ப்பரித்து நிற்பதையும் காண முடிகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாகும்.

மிகவும் நெகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஷார் செய்து வருகிறார்கள். இதோ அந்த வைரல் வீடியோ!!

uma