காலா படத்தின் 47 வயதான ரஜினிபட நடிகையா இது?விளம்பரத்திற்காக மோசமான ஆடையில் போஸ்..

Cinema News

தமிழ் சினிமாவில் 1990 வெளியான கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஈஸ்வரி ராவ். இப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதையடுத்து நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதைத்தொடர்ந்து 90களில் சில முக்கிய படங்களில் நடித்திருந்தாலும் சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் சினேகா நடிப்பில் 2002-இல் வெளியான ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

அடுத்ததாக, 2004ஆம் ஆண்டு வெளியான ‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், கடைசியாக 2006ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘சரவணா’ படத்தில் நடித்தார். படங்களில் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஈஸ்சரி ராவ்.

பிறகு இடைப்பட்ட காலத்தில் திரைப்படங்கள் எதிலும் நடிக்காத அவர் ‘கஸ்தூரி’, ‘கோகிலா எங்கே போகிறாள்’ போன்ற தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிப்படங்களில் நடித்து வரும் ஈஸ்வரி, 12 வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு மோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இளம் வயதில் படுமோசமான கொடுத்த புகைப்படம் ரசிகர்களை ஷாக்காக்கு வருகிறது.