காதலி கையில் மோதிரம்..!இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் விஷ்ணுவிஷால்..!இதோ புகைப்படங்கள்!!

Cinema News

நடிகர் விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு தனது காதலி ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து, அதன்பின் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

அதன் பின் பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவரே பலமுறை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், தனது காதலி கட்டா ஜ்வாலவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு, அவருக்கு மோதிரம் அணிவித்ததையும் உறுதி செய்துள்ளார். மேலும், இருவரும் புதிய வாழ்க்கையை துவங்கவிருப்பதாகவும் எல்லோரும் எங்களை வாழ்த்துங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

மோதிரம் மாற்றிக்கொண்டதால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வாழ்க்கையை துவங்குவதற்கு வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்!…