ஒற்றை ஆளாக பாம்பை பிடித்த நடிகை..! அட இவரோட மகளா இப்படி என்று நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

Cinema News

பிரபல நடிகரின் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்து பத்திரமாக வெளியே கொண்டு போய் விட்ட சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கொரோனாவால் படப்பிடிப்புகள் ரத்தான நிலையில், சொந்த ஊருக்கு சென்ற கீர்த்தி விவசாய பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவை அவர் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.