ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய நபர்! விண்கலால் விழுந்த அதிஷ்டம்!

Tamil News

கூரையை பிரித்து கொண்டு வரும் லஷ்மி என்று நாம் அடிக்கடி கேட்டு இருப்போம் ஆனால் தற்போது அந்த அதிஷ்டம் இந்தோனேசியா நாட்டில் ஒருவருக்கு நடந்துள்ளது. அந்நாட்டில் ஒருவருக்கு வீட்டிற்குள் விழுந்த விண்கல்லால் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.  இந்த அதிஷ்டத்தினால் மகிழ்ச்சியில் முழுகி உள்ளது அவரது குடும்பம்.

இந்தோனேசியா நாட்டில் சுமார் 2.1 கிலோகிராம் எடை கொண்ட விண்கல் ஒன்று வீட்டினுள் 15 சென்டிமீட்டர் ஆழம் வரை பாய்ந்து சென்றுள்ளது. இதனால் அந்த வீடு மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் கவலை அடைந்த அந்த குடும்பத்தினருக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. ஏனென்றால் அந்த விண்கல்  சுமார் ரூ.10 கோடி மதிப்பு கொண்டது ஆகும்.

இந்த அரிதான விண்கல்லால் 33 வயதே ஆகும் ஜோசுவா ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.  இந்த செய்தி அந்நாட்டில் காட்டு தீ போன்று பரவி வருகிறது.

uma