எஸ்பிபிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! நெகிழ்ச்சியுடன் மகன் வெளியிட்ட பதிவு!

Tamil News

மறைந்த பாடகர் எஸ்பிபியை கௌரவிக்கும் விதமாக ஒரு அரசு இசை மற்றும் நடன பள்ளி நம்ம எஸ்பிபியின் பெயரை வைத்துள்ளார்கள். இந்த நெகிழ்ச்சியான சம்பவதை அவரது மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

கொரோனா தொற்று மற்றும் உடல்நல குறைவுனால் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மறைவு அனைவரையும் சோகத்தில் மிகவும் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி எஸ்பிபியின் மறைவு இன்று வரை அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தாயை போல் தாலாட்டும் இளையராஜா பாடல்களில் அதிகம் பாடியவர் நம்ம எஸ்பிபி தான். இவரின் மறைவின் காரணமாக திரை துறையினர் முதல் நம்ம வீடுவரையும் அனைவருமே இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஸ்பிபி புகழை கௌரவிக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி ஒன்றில் டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் பெயரை வைத்துள்ளார்கள். தற்போது அந்த பள்ளியின் பெயர் ” டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி” என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியினை எஸ்பிபி மகன் சரண் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தைக்கு இத்தகைய மரியாதையை கொடுத்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

uma