எம்.ஜி.ஆரின் மறு உருவமே.. என்று விஜய் போஸ்டர் ஒட்டிய ரசிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

Cinema News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும் என்று அவரது ரசிகள் சில காலமாகவே அடிக்கடி ஏதாவது ஒரு போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள்.

போஸ்டர் ஒட்டும் விஷயத்தில் தேனி மாவட்ட விஜய் ரசிகளை அடிச்சுக்க ஆளே கிடையாது. அப்பப்போ ஏதாவது ஒரு போஸ்டரை போட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுவாங்க.

அப்படித்தான் இப்போது தேனி மாவட்ட ரசிகர்கள் ஒரு சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த படம் தான் ரிக்க்ஷாக்காரன். அந்த படத்தில் எம்.ஜி.ஆர். சைக்கிள் ரிக்க்ஷாவை இழுத்துச் செல்வது போல இருந்த புகைப்படத்திற்கு பதிலாக விஜய்யை அதில் வடிவமைத்து, விஜய் சைக்கிள் ஓட்டுவதுபோலவும், எம்.ஜி.ஆர். பின்பக்கம் இருப்பது போலவும் வடிவமைத்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இந்த போஸ்டரில் “எம்ஜிஆரின் மறு உருவமே“, “மாஸ்டர் வாத்தியாரே“, “என்றும் அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க 2021ல் உங்கள் வரவை காணும் தமிழகம் “வாங்க தலைவா“ என்றும் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

அந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.