என்ன கேட்டாலும் தரும் அற்புத விளக்கு? விலை வெறும் ரூ 2.5 கோடி தான்! வாங்கிட்டு போன நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Tamil News

மருத்துவர் ஒருவர் சாதாரண பித்தளை விளக்கை இரண்டரை கோடி ரூபாய்க்கு வாங்கிய சம்பவம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள லீக் கான் என்ற வயதான மருத்துவர் அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக மருத்துவப்பணி செய்து வருகிறார்.

இந்த மருத்துவர் சமீனா என்ற பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சையளிக்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் கணவரான இஸ்மாயிலின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இஸ்மாயில் அந்த மருத்துவரிடம் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ‘மாய விளக்கு’ இருப்பதாகவும் அந்த விளக்கு எது கேட்டாலும் கொடுக்கும் என கூறினார். சில மாய மந்திரங்களையும் செய்து காட்டினார்

அழகான பெண், பொன், பொருள் கொடுக்கும் என ஆசைகாட்டினார். அதை நம்பிய மருத்துவர் விளக்கை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என விலைக்கு வாங்க முடிவு செய்தார்.

இதையடுத்து அந்த மருத்துவரிடம் பல தவணைகளில் ரூ.2.5 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டு அந்த விளக்கினை கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த விளக்கினை தொட்டு தனக்கு வேண்டியதை கண்ணை மூடி கேட்டபோது அதிலிருந்து ஒன்றும் வரவில்லை. எதுவும் வராத உடன் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றுள்ளார், தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் லீக் கான், இதுகுறித்து உடனடியாக பு கா ர் அளித்தார். இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.