கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது கொடுத்துள்ள பிகினி ஸ்டைல் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி ஹிட் கொடுத்த கேஜிஎஃப் படம் அதன் நடிகர்களை உலக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக்கியது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான இந்தப் படம் கிட்டத்தட்ட உலகமெங்கும் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு , ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னட கேஜிஎஃப்: அத்தியாயம் 1 இல் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் ஸ்ரீநிதி.முதல் பாகத்தின் தொடர்ச்சியான KGF: அத்தியாயம் 2 இல் ஸ்ரீநிதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.
பிரமாண்ட படைப்புகளை அடுத்து ஸ்ரீநிதி தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கோப்ராவில் விக்ரமுடன் நடித்துள்ளார்.