உலகத்திற்கு தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலி…! குழந்தையின் அழகிய புகைப்படம்இதோ!

Tamil News

எப்போ எப்போ என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதில் கூறி இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் மற்றும் அனுஷ்கா இருவருக்கும் அழகிய தேவதை போன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது முதன் முறையாக அவர்களின் குழந்தையை உலகத்திற்கு காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவருமே வெகு காலமாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் ஆவர்.  இதனையடுத்து, திருமணம் ஆனதில் இருந்து  குழந்தை எப்போது என எல்லோரும் கேட்க திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அனுஷ்கா ஷர்மா புகைப்படத்துடன் அறிவித்தார்.

இந்த நிலையில்,  இம்மாதம் 11ம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து தற்போது தான் இருவருமே முதன்முதலாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்,

 

uma