உயிரிழந்த பிச்சைக்காரரை சுமந்து சென்று அவருக்கு இறுதி மரியாதையும் செய்த பெண் எஸ்.ஐ..! குவியும் பாராட்டுக்கள்..! எந்த ஊரியில் தெரியுமா?

Cinema News

ஆந்திர அருகே உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை அம்மாநிலத்தை சேர்ந்த பெண் எஸ்.ஐ ஒருவர் அவரே சுமந்து சென்றதுடன் அந்த நபருக்கு இறுதி மரியாதை செய்யவும் உதவினார் அந்த பெண் அதிகாரி. இந்நிலையில், பெண் அதிகாரி அவரை சுமந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலாரும் பாரட்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.  தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அங்கு என்ற பெண் எஸ்.ஐ. ஸ்ரீஷா, முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டார்.  ஆனால் அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. இதனால் பலரும் சடலத்துக்கு அருகில் கூடச் செல்ல விரும்பவில்லை. இதனையடுத்து அந்த பெண் அதிகாரியே அவரை தோலில் தூக்கி கொண்டு சென்று அவருக்கு இறுதி மரியாதையும் செய்து வைத்தார்.

இது சம்பந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாராட்டுகளை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

uma