இளைஞர் ஒருவர் திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்!! அவர் அதற்க்கு சொன்ன காரணம்..!

Tamil News

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் 24 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, தன்னுடைய பெயரை ஹரினா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருப்பசாமி, திருநங்கை ஹரினாவைக் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின் இதற்கு சம்மதம் தெரிவிக்க, இரு வீட்டாரின் சம்மதத்துடன், கோவிலில் ஹரினாவுக்கும், கருப்பசாமிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

மேலும் கருப்பசாமி கூறுகையில், என்னைப் பொறுத்தவரை ஹரினா அமைதி, இரக்கம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இது எல்லாம் அவர் மீது காதலை ஏற்படுத்தியது. நான் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற போது, என் வீட்டில் ஒ ப்பு கொ ள்ள வில்லை, அதன் பின் அவர்களிடம் மெல்ல, மெல்ல சொல்லி புரிய வைத்து, பல நாட்கள் காத்திருந்தேன்.

அதன் பின் ஒருவழியாக பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

அன்பும், அக்கறையும் உள்ள ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டுவோம் என்று கூறி முடித்துள்ளார்.