இயக்குனர் செல்வராகவன் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்..! புகைப்படத்துடன் வந்த செய்தி!

Cinema News

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட வெற்றி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். என்னை பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று தனுஷ் ஒரு படத்தில் வசனம் பேசுவார்.

அப்படி தான் இவர் இயக்கும் படங்களும் இருக்கும். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதாவது சுவாரஸ்ய விஷயம் கண்ணில் படும்.

இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது டுவிட்டரில் சில வாழ்க்கை தத்துவங்களை செல்வராகவன் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

தற்போது அவரது மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.