இதை பார்க்க இப்போ நீ இல்லையே சித்ரா..! ரசிகர்களுக்கும் பெற்றோருக்கு கிடைத்த ஆறுதலான செய்தி இதோ!

Cinema News

மண்ணை விட்டு மறைந்தாலும் நம்ம மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் ஆறுதலாக அமைகிறது. அதுமட்டுமின்றி இந்த தகவலை இணைய வாசிகள் ஷார் செய்து வருகிறார்கள்.

முகத்தில் எப்போதும் சிரிப்புடன் அனைவரிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ளும் சின்னத்திரை சித்ரா மறைவு அனைருக்கும் சோகத்தை கொடுத்தாலும், அவரை பற்றிய தகவல்கள் போட்டோகள் வீடியோக்கள் என இன்றும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு தான் வருகிறது.

இவரின் மறைவிற்கு காரணம் கணவர் ஹேமந்தின் கொடுத்த டார்ச்சர் தான் என விசாரணையில் தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவரது பெற்றோர்கள் ரசிகர்கள் இணைய வாசிகள் என அனைவரும் வரை சாடியுள்ளார்.

இந்நிலையில், நடிகை வி.ஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது என்ற தகவல் தற்போது இணையத்தில் வருகிறது. இந்த, திரைப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெற்றோர் வெளியிட, படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்  ஆர்வமாக உள்ளனர். மேலும், இந்த செய்தி அவரது பெற்றோர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது.

uma