இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!! மண்ணுக்குள் புதையுண்ட குடும்பம்…. அழைத்து செல்லவருவார்கள் என்று காத்திருக்கும் வளர்ப்பு நாய்!!

Tamil News

கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இற ந்த வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயி ரி ழந்தனர்.

இதில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு, பிரேத பரி சோதனை க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குடியிருப்புகளில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த பகுதி முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டதால், உயி ர் ப லி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாய் தன்னை வளர்ந்த குடும்பம் மண்ணுக்குள் புதையுண்டதால் அவர்கள் மீண்டும் வந்து தன்னை அழைத்து செல்வார்கள் என்று நகராமல் காத்திருக்கிறது.

அந்த இடத்தில் இருந்து நாயை விர ட்டியும் தன் குடும்பத்திற்காக காத்திருக்கின்றது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.