ஆத்தி பிக்பாஸ் வீட்டில் நுழையும் அடுத்த வயல் கார்டு போட்டியாளர் இவரா? வெளியான ப ர பரப்பு தகவல்..!

big boss

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம், 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே சுரேஷ் மற்றும் அனிதாவிற்குள் சண்டை உருவாகி செம்மா ஜோராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் வயல் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா வருகை தந்தார். அதே நேரத்தில் நடிகை ரேகா கடந்த ஞாயிறு அன்று முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ஆஜித், பாலாஜி, அனிதா, சுரேஷ் மற்றும் ஆரி ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் பிக்பாஸ் தரப்பு அடுத்ததாக ஒரு, வயல் கார்டு பொறியாளரை இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, சுசிலீக்ஸ் சுசித்ரா தான். இவர் பிரபல பாடகியாகவும், ரேடியோ ஜாக்கியாகவும் நன்கு ரசிகர்களால் அறியப்பட்டவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் இது குறித்து அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் ப ரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் எப்படி பட்ட ரணகளம் வெ டிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.