ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் விருந்தினராக வந்த இ றந்த மனைவி !! கண்ணீர் விட்ட கணவர் !! இப்படியும் ஒரு தம்பதியா என நெகிழ்ந்துபோன தருணம் !!

Tamil News

ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு

அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர்.இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இழந்துவிட்டார்.சிறிய காயத்துடன் இரண்டு மகள்களும் உயிர்தப்பியுள்ளனர். மாதவியின் மறைவால் ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் கலங்கியுள்ளது.

தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன் பெங்களூரு நகரில் பிரபலமான பொம்மை தயாரிப்பாளர்களான கோம்பே மானேயிடம் தனது மனைவியின் மொழுகு சிலையை உருவாக்க ஆர்டர் கொடுத்துள்ளார் சீனிவாஸ்.

புதிய வீடு ஜூலை மாதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 8ம் திகதி அனைத்து உறவினர்களையும் புதுமனை புகுவிழாவிற்கு சீனிவாஸ் அழைத்துள்ளார்.

விழாவில் கலந்துக்கொண்ட உறவினர்கள் அனைவரும் வீட்டிலிருந்த மாதவியின் மொழுகு சிலையை கண்டு திகைத்து போயுள்ளனர். மேலும், மறைந்த மனைவி மீது சீனிவாஸ் வைத்துள்ள பாசத்தை எண்ணி கலங்கியுள்ளனர்.

மாதவியின் மெழுகு சிலையுடன் சீனவாஸும் அவருடைய இரு மகள்களும் குடும்பமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் காண்போரை கலங்க வைத்துள்ளது.