அரசு பேருந்தில் பயணம் செய்த இந்த புகைப்படத்தில் இருக்கும் முக்கிய பிரலம் யாரென்று கண்டுபிடியுங்கள்..!

Cinema News

அரசு பேருந்தான பல்லவன் பேருந்தில் தனது கல்லூரி காலத்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகர் கார்த்திக் அவர்கள் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே மிகுந்த வைரலாகி வருகிறது.

நடிகரும் சிவக்குமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்திக் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்னர் தமிழ் சினிமா இயக்குனருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்த பின்னர் தான் முதன் முதலாக தமிழில பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தை அடுத்து  தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.  இதனை தொடர்ந்து ரெமோ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள சுல்தான் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் தான் இளம் நடிகை ராஷ்மிகா தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி கால புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் தன்னுடைய கல்லூரி நாட்களை கழித்ததாகக் கூறியுள்ள நடிகர் கார்த்திக், அந்த நாட்கள் உண்மையான நட்புகளுடன் இனிமையாக கழிந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் அவரது ரசிகர்களியே மிகுந்த வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

 

uma