அப்போது உணவுக்கே வழியில்லாமல் க தறி அழுத முதியவர்.. தற்போது ட்ரெண்டிங்கில் பாபா தாபா கடை வைரலாகும் வீடியோ !!

Viral Videos

பல  ஆண்டுகளாக சிற்றுண்டி உணவகம் நடத்தி வரும் முதிய தம்பதிகள் குறித்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலான நிலையில் அவர்களது கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் நீண்ட காலமாக தள்ளுவண்டியில் முதிய தம்பதிகள் சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சமீப மாதங்களாக அவர்களது சிற்றுண்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. நாளுக்கு நாள் யாருமே வராததால் பலருக்கு உணவளித்த அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்துபோன சிற்றுண்டி கடை நடத்திய முதியவர் க தறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வைரலான இந்த வீடியோவை பார்த்த நடிகை சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோர் முதியவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

மேலும், முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்க கோரி இணையத்தில் பாபா கா தாபா என்ற ஹேஷ்டேக் வைரலானது.

அதைத்தொடர்ந்து சுற்றிலும் உள்ள டெல்லி வாசிகள் பலர் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்துள்ளனர். பிரபலங்கள் பலரும் பாபா கா தாபாவில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.