அப்பா இறப்பிற்கு பிறகு மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா!! கேட்பதற்கு ஆள் இல்லமால் பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..!

Cinema News

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதனால் முதல் சீசனின் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த பிக்பாஸ்  சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த பிக்பாஸ் சீசனில் காதல் ஜோடிகளாக இருந்த கவின் மற்றும் லாஸ்லியா தற்போது ஒன்று சேர்ந்துள்ளார்கள். தனது அப்பாவின் இறப்பிற்கு பிறகு லாஸ்லியா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஆகும். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

uma