அதிர டியாக வெளிவந்த விஜய் 65 படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறும் சீக்ரெட் ! இதோ அவர் பதிவு செய்த ட்விட்!

Cinema News

நேற்று வெளியான விஜய் 65வது படம் பற்றிய வீடியோ தான் இன்று இணையத்தில் வைரலாகி  இணைய வாசிகளுக்கு பேசும் பொருளாகவும் அமைந்துள்ளது. மாஸ்டர் படம் திரைக்கு வராத நிலையுலும் விஜயின் 6 5 பட தகவலகள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தாலும் சினிமா துறையில் புதிதாக வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.  அப்படி அமைந்தது தான்  அவரது 65வது இயக்குனர் நெல்சன் வாய்ப்பு.

நெல்சன் அவர்கள் இதுவரை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படமும், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். டாக்டர் படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெல்சனுக்கு விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் குறித்த தகவல் நேற்று மாலை 5 மணியளவில் வெளியானது. இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் அவர், தன் பட இயக்குனர் நெல்சனுக்கு பெரிய நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை பார்த்து மகிழ்ந்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

 

இதோ அவர் செய்த ட்விட்!

 

uma