அடேங்கப்பா !நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு அதுக்குள்ள இத்தனை கோடியா!!வாயைப்பிளந்த ரசிகர்கள்!

Cinema News

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ‘கீதாஞ்சலி’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பிறந்தவர் என்றும் இவரின் தற்போதைய திரை வாழ்வை பற்றியும் நமக்கு தெரியும். ஆனால் இவரின் தற்போதைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?

*கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தும் ஜக்வார் மற்றும் ஆடி சீரிஸ் ஆகிய இரண்டு கார் மதிப்பும் 3.5 கோடி.

* இவர் கேரளாவில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 5 கோடி..

* தற்போது ஒரு படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் 1.5 கோடி.

* இவரின் திரையுலக நிகர மதிப்பு சுமார் 25 – 30 லட்சம் என கூறப்படுகிறது

* நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு 85 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது….

மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, முன்னணி தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி யுள்ளோம்.