அடேங்கப்பா! சீத்தாப்பழத்தில் இவ்வளவு இருக்கா? தலைமுடி பிரச்சனைக்கு ஒரே தீர்வு!

Life Style

ஏழைக்களுக்கு உகந்த பழம் என்றால் அது சீத்தாப்பழம் தான். இந்த பழத்தில் அவ்வளவு சக்தி மிகுந்த ஊட்டச்சத்துக்கள் இருகின்றது. அவை என்ன என்பதை தான் பார்க்க போகிறோம்.

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்ணும் பழங்களில் சீத்தாப்பழமும் ஒன்றாகும்.

சீத்தாப்பழத்தின் பயன்கள்:

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்தால் எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும். இந்த பழத்தினால் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலுக்கு வலிமை தரும்.

இந்த பழத்தை உண்டால் தலைக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும், விதைகளை பொடியாக்கி சமயளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். அத்துடன் சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர், காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு சுத்தமாக போகிவிடும்.

தலைமுடிக்கு ஒரே தீர்வு:

இந்த பழத்தின் விதையை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர வேண்டும் இப்படி செய்தால் முடி உதிராது. சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவகுணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.  இது போன்ற பல மருத்துவ குணங்கள் உடையது சீத்தாப்பழம்.

uma